1 ஆண்டுக்கு முன் மறைந்த அப்பா... 10 நாட்களுக்கு முன் தப்பிய உயிர்... மீண்டும் விபத்தில் பறிபோன இளம்பெண் MLA உயிர் - ஷாக் பின்னணி

x

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சுல்தான்பூர் ஓ.ஆர்.ஆர் என்ற பகுதியில் விபத்து நேர்ந்தது. எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதியது. இதில் படுகாயமடைந்த லாஸ்யா நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நார்கட்பள்ளி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாஸ்யா நந்திதா உயிர்தப்பிய நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்டோன்மென்ட் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சயன்னா ஓராண்டுக்கு முன்பு காலமானதால், ​​அவரது மகள் லாஸ்யா நந்திதாவுக்கு பாரத் ராஷ்ட்ர சமிதி சீட் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்