குடும்பத்தினர் கண்முன் மாணவி கடத்தல்-காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த மக்கள் - அதிர வைக்கும் வீடியோ

x

குவாலியரில் உள்ள ஜான்சி சாலை பேருந்து நிலையத்தில், அந்த கல்லூரி மாணவி தனது குடும்பத்தினருடன் பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் குடும்பத்தினர், ஜான்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி கடத்தப்படும்போது அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் உள்ள பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்