ஜீப் ஓடும்போதே கழன்ற டயர்..உள்ளே இருந்த உயிர்கள்.. - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட புல் புள்ளி பகுதியில், தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப் ஒன்று சென்றுள்ளது. நகரத்தில் நுழைந்தபோது ஜீப்பில் இருந்த டயர் திடீரென கழன்று, சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதி சாலையில் விழுந்தது. டயர் உருண்டபோது வேறு எந்த வாகனமும் குறுக்கே வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஜீப்பும் மெதுவாக சென்றதால் அதில் இருந்தவர்கள் நூலிழையில் உயிர்தப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com