"காவிரி, மேகதாது... சமரசமே கிடையாது..." - பரபரப்பை கிளப்பிய சித்தராமையா

x

காவிரி, மேகதாது அணை, மகதாயி திட்டங்களில் கர்நாடகாவின் உரிமையை காப்பாற்ற அனைத்துக் கட்சிக் குழு பிரதமரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா கூறினார்.

இதுதொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடக மாநிலத்தின் நிலம், நீர் மொழி, கலாச்சாரத்தை பாதுகாப்பதில் எந்த சமரசமும் கிடையாது என்று கூறினார். 7 கோடி கன்னட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நம் பொறுப்பு என்று கூறிய அவர், காவிரி, மேகதாது அணை, மகதாயி திட்டங்களில் கர்நாடக மாநிலத்தின் உரிமையை காப்பாற்ற அனைத்துக் கட்சி குழு பிரதமரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழகம் கேட்டுள்ள நீரை விட குறைந்த அளவு நீரை மட்டுமே வெளியேற்றி வருவதாகவும், 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்ற வேண்டும் என உத்தரவு வந்துள்ள நிலையில் பத்தாயிரம் கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது என்றும் கூறினார். கர்நாடகத்துக்கு தேவையான நீரை காப்பாற்ற உச்சநீதிமன்றத்தில் உரிய வாதத்தை நாம் எடுத்து வைக்க வேண்டும் என்று கூறிய அவர், அரசின் நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்