காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வருமா..? - கர்நாடகாவுக்கு காத்திருக்கும் உத்தரவு

x

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் காவிரியில் இருந்து கர்நாடகம் தர வேண்டிய 10 டி.எம்.சி நீரை திறக்க உத்தரவிட வேண்டுமென தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 5 டி.எம்சி நீர் தந்திருக்க வேண்டும் - ஆனால் 2 மாதங்களிலும் ஒன்று புள்ளி நான்கு டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டுள்ளதாக கூறினர். எனவே மூன்று புள்ளி ஆறு டி.எம்.சி நீர் மற்றும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான தண்ணீரை தடையின்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீர் இருப்பு மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு கருத்துகளையும் கேட்ட எஸ்.கே. ஹல்தர், அதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்