``மனைவி கண்முன்னே பலாத்காரம்.. வீடியோ எடுத்து மதம் மாற டார்ச்சர்’’ - கர்நாடகாவில் பெண் புகார்

x

``மனைவி கண்முன்னே பலாத்காரம்.. வீடியோ எடுத்து மதம் மாற டார்ச்சர்’’ - கர்நாடகாவில் பெண் பரபரப்பு புகார்

கர்நாடகாவில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், மிரட்டி மதமாற்றம் செய்ய முயன்ற இஸ்லாமிய தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவியில், பாதிக்கப்பட்ட பெண் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்த நிலையில், விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பின்னர் அந்தப் பெண், தனக்கு பழக்கமான ரபீக் - கவுசர் தம்பதி வீட்டில், கடந்த ஓராண்டாக தங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடைக்கலம் கொடுத்த தம்பதிக்கு எதிராக, அந்தப் பெண் திடீரென காவல்நிலையத்தில் புகார் அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகாரில், மனைவி கண்முன்னே ரபீக், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை அவரது மனைவி கவுசர் புகைப்படம் எடுத்து, மதம் மாறுமாறு கூறி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கணவரிடம் விவாகரத்து வாங்கவில்லை என்றால், புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதுடன், பர்தா அணியுமாறு வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், கணவன் மனைவி இருவர் மீதும், பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்