கர்நாடகா சிவில் சர்வீஸ் தேர்வு - தாலியை கழட்ட சொன்ன அதிகாரிகள்

x

கார்நாடக மாநிலத்தில் குடிமைத் தேர்வு எழுதச் சென்ற திருமணமான பெண்களின் தாலி, மெட்டி உள்ளிட்டவற்றை கழற்ற தேர்வறை கண்காணிப்பாளர்கள் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றன. தேர்வு எழுதச் சென்ற திருமணமான இந்து சமூகத்தை சேர்ந்த பெண்கள், கடும் கசப்பான அனுபவங்களை சந்தித்ததாக மாநில பாஜக குற்றம்சாட்டி உள்ளது. தேர்வறை கட்டுப்பாடு என்ற பெயரில், திருமணமான இந்து பெண்களின் தாலி, கருகமணி, மெட்டி உள்ளிட்டவற்றை அகற்றுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. ஹிஜாப் பெண்களை சோதித்து அனுப்பியது போல, இந்து பெண்களையும் சோதித்து அனுப்பி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்