நடத்துனரை கத்தியால் குத்திய இளைஞர்? - அதிர வைத்த பகீர் வாக்குமூலம்

x

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பேருந்தின் கதவருகே நிற்க வேண்டாம் என கூறியதற்கான நடத்துநரை இளைஞர் கத்தியால் குத்தியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவைச் சேர்ந்த ஹரிஷ் சின்ஹா நடத்துனர் யோகேஷை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். சமயோசிதமாக செயல்பட்ட ஓட்டுனர் அந்த இளைஞரை உள்ளேயே வைத்து பேருந்தின் கதவுகளை மூடிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கடுப்பான ஹரிஸ் பேருந்து கண்ணாடிகளை உடைத்து விட்டு வெளியேற முயன்ற நிலையில் முடியவில்லை. போலீசார் விரைந்து வந்து ஹரிஷைக் கைது செய்தனர்... வேலையை இழந்த விரக்தியில் இருந்த ஹரிஷ், உணவுக்காக அலையாமல் சிறைக்கு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்