ஒரே வீட்டில் தாம்பத்ய உறவு..பறிபோன கண், பாழாய்போன முகம் - Illegal Affair-ல் விளைந்த வினை

x

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை அருகே செல்போன் எண்ணை பிளாக் செய்த பெண் மீது கள்ளக்காதலன் ஆசீட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகல்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட கடனகேரி பகுதியில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவரை பிரிந்து 8வயது மகளுடன் தனியாக வசித்து வந்த லட்சுமிக்கு, மவுனேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே வீட்டில் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தனர். நடத்தையில் சந்தேகித்து அடிக்கடி சண்டையிட்டதால் கள்ளக்காதலனின் செல்போன் எண்ணை லட்சுமி பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மவுனேஷ், லட்சுமியின் வீட்டிற்கு வந்து ஜன்னல் வழியாக ஆசிட் வீசியுள்ளார். இதில் லட்சுமியின் இடது கண், முகம் பலத்த காயம் அடைந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், மவுனேஷை கலடகி போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்