வங்கக் கடலில் கடலோர காவல்படை சாகசம்.. வியந்து பார்த்த பொதுமக்கள் | Karaikal

x

காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கடற்படைக்கு சொந்தமான கப்பலில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் கடலுக்குள் சென்றனர். அவர்களுக்கு, கடலில் தத்தளிக்கும் மீனவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது எப்படி என்பது குறித்து இந்திய கடலோர காவல் படை வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர். அதைத் தொடர்ந்து, தீவிரவாதிகளின் கப்பலை சுற்றிவளைத்து சரணடைய செய்வதையும் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டினர். இந்திய எல்லைக்குள் நுழையும் எதிரி நாட்டு கப்பலை ராக்கெட் லாஞ்சர் மற்றும் அதிவேக இயந்திர துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்துவதையும் நிகழ்த்தி காண்பித்தனர். இந்த வீரதீர சாகசங்களை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்தனர்


Next Story

மேலும் செய்திகள்