பாலியல் வன்கொடுமை வழக்கு - கன்னட திரைப்பட நடிகர் வீரேந்திர பாபு கைது

x

பாலியல் வன்கொடுமை வழக்கில், கன்னட திரைப்பட நடிகர் வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

சுயம் கிருஷி படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் கடந்த 2011-ம் ஆண்டு தடம்பதித்தவர்​ வீரேந்திர பாபு. 2 ஆண்டுகளுக்குமுன், மயக்கநிலையில் இருந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதனை வீடியோவாக பதிவு செய்து, சமூகவலைதளங்களில் பகிர்வதாகக்கூறி, 15 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்தப் பெண், தனது நகைகளை விற்று பணம் கொடுத்துள்ளார். இதனிடையே, கடந்த ஜூலை 30-ம் தேதி, வீரேந்திர பாபு மீண்டும் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு, காரில் ஏற்றிச் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த தங்க நகைகளை பறித்துள்ளார். இதுகுறித்து பெங்களூரு கொடிகேஹள்ளி காவல்நிலையத்தில், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீரேந்திர பாபு மற்றும் அவரது நண்பர்கள் இருவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்