அதிரப்பள்ளி சாலையை அதிரவைத்த கபாலி... 2 மணி நேரம் யாரும் நகரல.
கேரளாவில் சாலையோரத்தில் நின்றபடி, காட்டு யானை ஒன்று, புற்களை மேய்ந்து கொண்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சூரில் உள்ள சோலையார் பகுதி, அதிரப்பள்ளி - வால்பாறை சாலையில், கபாலி என்ற காட்டுயானை, சாலையோரமாக நின்று புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்தனர். சுமார் இரண்டு மணிநேரம் சாலையோரத்தில் முகாமிட்ட அந்த யானையை வனத்துறையினர் விரட்டியதை அடுத்து, வனப்பகுதிக்குள் சென்றது. வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story
