"JUST மிஸ்.. உடல் நசுங்கி இருக்கும்" - உயிரை கண் முன் காட்டும் வீடியோ

x

மத்தியப்பிரதேச மாநிலம் நீமுச் ரயில்நிலையத்தில், நகரும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை, காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நகரும் ரயிலில் இறங்க முயன்ற போது தடுமாறி நடைமேடையில் விழுந்த பயணியின், கால்கள் ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையிலான பகுதியில் சிக்கிக் கொண்டது. துரிதமாக செயல்பட்ட ரயில்வே காவலர் தர்மேந்திர குமார், பயணியை காப்பாற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்