ஜாபர் சாதிக்கிற்கு இன்று மாலையோடு நிறைவு... அடுத்து என்ன?

x

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, கடந்த 9-ம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்தது. விசாரணையின் போது, ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் சலீம் மற்றும் மைதீன் ஆகியோருக்கு போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை பிடிப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஜாபர் சாதிக்கின் நண்பர் சதானந்தம் கைது செய்யப்பட்டார். இதனிடையே, ஜாபர் சாதிக்கின் போலீஸ் காவல் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைவதையொட்டி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்