உலகமே உற்று நோக்கிய சந்திரயான்-3..மேடையில் பெருமையாக சொன்ன இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் பீம் தருச்சா..

x

சந்திரயான் 3 -ன் வெற்றிக்கு பிறகு இந்த உலகம் இந்தியாவை பார்க்கும் விதம் மாறி உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் பீம் தருச்சா தெரிவித்துள்ளார். திருப்பூர் காந்தி நகரில் உள்ள தனியார் பள்ளியில், சேஸ் யுவர் ட்ரீம்ஸ் என்கிற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். டாக்டர், எஞ்சினியர், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற படிப்புகள் மட்டும் தான் மதிப்புமிக்க படிப்புகளாக மாணவர்கள் பார்ப்பதாக கூறிய அவர், இவைகளை தாண்டி விண்வெளி ஆராய்ச்சி போன்ற சவால்கள் நிறைந்த பல படிப்புகள் உள்ளதாக கூறினார். சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு மகத்தான சாதனையைக் குறிக்கிறது என்றும் டாக்டர் பீம் தருச்சா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்