நிலவு ஆக்சிஜன் மனிதன் வாழ உகந்ததா.. விவசாயம் செய்ய முடியுமா? - உடைத்து சொன்ன மயில்சாமி அண்ணாதுரை

x

நிலவில் காணப்படு ம் ஆக்சிஜன் மனிதன் வாழ உகந்ததா...? நிலவில் உள்ள தனிமங்களை பூமிக்கு கொண்டுவர முடியுமா என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

நிலவில் அறிவியல் ரீதியான ஆய்வுகளை தீவிரமாக மேற்கொள்ளும் சந்திரயான்-3, தென் துருவத்தில் கந்தகம் இருப்பதை உறுதி செய்துள்ளது.

அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனிசு, சிலிகான், ஆக்சிஜன் ஆகியவை இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே நீர் இருப்பதை சந்திரயான் 1 உறுதி செய்த நிலையில், ஆக்சிஜன் இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் வியப்பளித்துள்ளது.

இது மனித வாழ்வுக்கு உகந்ததாக என கேட்டால் கண்டிப்பாக என சொல்கிறார் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.... ஆக்சைடு வடிவத்தில் இருக்கும் ஆக்சிஜனை பயன்படுத்தலாம் என்றார்.

மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி

நிலவில் உள்ள ஆக்சிஜன் மனிதன் வாழ உகந்ததா...?

"நிலவில் நீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்து பயன்படுத்தலாம்"

"லேசர் கற்றையில் தனிமங்களை உடைக்கையில் பல மூலக்கூறுகள்"

"டைட்டானியம், இரும்பு, ஆக்சிஜன், கந்தகம் இருக்கிறது என்கிறது "

"கனிமங்கள் பிரிவதால் வெளியேறும் ஆக்சிஜனாக இருக்கலாம்"

"ஆக்சிஜன் கண்டிப்பாக மனித வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்கும்"

"டைட்டானியத்தையும் எடுக்கலாம், ஆக்சிஜனையும் எடுக்கலாம்"

இப்படி நிலவில் காணப்படும் தனிமங்களை பூமிக்கு கொண்டுவர முடியுமா...? என கேட்டால் முடியும் அதற்கு தனிமத்தின் பயனையும், அதனை கொண்டுவரும் செலவைவும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றார்.

மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி

தனிமங்களை பூமிக்கு கொண்டுவர முடியுமா?

"முதல்கட்டமாக அங்கு பயன்படுத்த முடியுமா என பார்க்க வேண்டும்"

"கொண்டுவரும் செலவைவிட பயன் அதிகமா என்பதை பார்க்க வேண்டும்"

"ஹீலியம் 3, டைட்டானியம், பிளாட்டினம் பூமியில் அரிதானது"

"தனிமங்களை கொண்டுவருவதை வர்த்தக ரீதியாகவே பார்க்க வேண்டும்

நிலவில் விவசாயம் செய்யலாமா என கேட்டால் ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வை சுட்டிக்காட்டி, தாவரங்கள் வளர வாய்ப்புள்ளது என்றார்.

மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி

DD mayilsamy byte 5

நிலவில் விவசாயம் செய்ய முடியுமா?

"நிலவில் விவசாயம் என்பது குறித்து பரிசோதனை நடக்கிறது"

"விண்வெளியில் பயிர்கள் விளைய வைக்கப்பட்டுள்ளது"

"கோழி வளர்ப்பது போல், பயிர்களுக்கு சத்துக்களை கொடுக்கலாம்"

"முதல்கட்ட பரிசோதனையில் தாவரங்கள் வளரும் என தெரியவந்துள்ளது"

நிலவில் 14 நாட்கள் பகல், 14 நாட்கள் இரவு என இருப்பது மனித வாழ்வுக்கு ஏற்றதா என்றால், தென் துருவத்திலும் சூரிய ஒளி மின்சக்தி எடுக்கலாம் எனவும் ஹைட்ரஜன் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி

DD mayilsamy byte 6 to 8

14 நாட்கள் இரவாக இருக்கும் நிலவில் மனிதன் வாழ முடியுமா?

"பூமியிலேயே நார்வே, ஸ்வீடனிலே நீண்ட நாட்கள் பகல் உள்ளது"

"நிலவில் ஹைட்ரஜன் இருக்கும் போது எரிசக்தியை உருவாக்கலாம்"

"தென்துருவத்திலும் சூரிய ஒளி எப்போதும் விழும் இடமும் உள்ளது"

இஸ்ரோவும் ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை கண்டறியும் ஆய்வு தொடர்வதாக கூறியுள்ளது. தென்துருவத்தில் சல்பைட், ஆம் கந்தகம் இருப்பதை

உறுதி செய்த முதல் ஆய்வு இதுவாகும். அடுத்தக்கட்ட ஆய்வுகளிலும் வியப்பளிக்கும் தகவல்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்