மலேசியாவில் நடந்த சர்வதேச சிலம்ப போட்டி - 23 பதக்கங்களை குவித்து மாணவர்கள் சாதனை

x

திருமங்கலத்தில் உள்ள சிலம்ப பயிற்சி மையத்தில் மாணவ- மாணவியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்ற மாணவர்களில் 14 பேர், மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச சிலம்பு போட்டியில் கலந்து கொண்டனர். வாள்வீச்சு, வேல் கம்பு சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். 9 தங்கம், 7 வெள்ளி உட்பட 23 பதக்கங்களை குவித்தனர். சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. சிலம்ப போட்டியில் பங்கேற்றது புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்