ரயிலில் வட மாநிலத்தவர் `ஓசி' பயணம்... டிக்கெட் கேட்ட TTR... கீழே தள்ளி கொன்ற கொடூரம்...

x

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்த ஒடிசாவை சேர்ந்த ஒருவர், தன்னை தட்டிக்கேட்ட டிக்கெட் பரிசோதகரை கீழே தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் வினோத். ரயில்வே டிக்கெட் பரிசோதகரான இவர், எர்ணாகுளத்திலிருந்து பாட்னா செல்லும் ரயிலில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வடமாநிலத்தை சேர்ந்த சிலர் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து கேள்வி கேட்ட வினோத்திற்கும், வட மாநிலத்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ரயிலின் கதவருகே நின்று கொண்டிருந்த வினோத்தை, ரஜினிகாந்த் என்பவர் திடீரென கீழே தள்ளிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வினோத்தை தண்டவாளத்தில் தேடியபோது, திருச்சூரின் வேலப்பையா என்ற இடத்தில் அவர் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ஒடிசாவை சேர்ந்த ரஜினிகாந்த் ரனாஜித் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் மதுபோதையில் டிக்கெட் பரிசோதகரை கீழே தள்ளிவிட்டு கொன்றது தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட வினோத் ஒரு நடிகர் என்பதும், கேரளாவின் புலிமுருகன், ஜோசப், ஆண்டனி உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்