81-ல் இருந்து 40வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா | India

x

உலக புத்தாக்க குறியீட்டில், இந்தியா 81வது இடத்தில் இருந்து 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.2023 உலகளாவிய புத்தாக்க குறியீட்டு தரவரிசையை உலக அறிவுசார் சொத்து அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில்,

2015-ஆம் ஆண்டில் 81-வது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ஆம் ஆண்டில் 40-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மகத்தான அறிவு மூலதனம், துடிப்பான புத்தொழில் சூழலியல், பொது மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் பணிகள் போன்றவை ஜி.ஐ.ஐ தரவரிசையில் நிலையான முன்னேற்றத்தின் காரணிகளாக பார்க்கப்படுகிறது. அறிவியல் துறைகள், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, அணுசக்தி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறை, வேளாண் ஆராய்ச்சி, கல்வி மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறை போன்ற துறைகளும் தேசிய புத்தாக்க சூழலியலை வளப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மின்சார வாகனங்கள், உயிரி மற்றும் நானோ தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கொள்கை அடிப்படையிலான கண்டுபிடிப்புகளை கொண்டு வருவதற்கான தேசிய முயற்சிகளை உகந்ததாக்குவதை உறுதி செய்ய நித்தி ஆயோக் உழைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்