"சீண்ட நினைத்தால்..." சீனா, பாக்.க்கு இந்தியா மறைமுக வார்னிங்..! - மிரட்டல் வீடியோ

x

ஒடிசாவில், குறுகிய தூர ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்கரைப் பகுதியில், கடந்த 28 மற்றும் 29ம் தேதிகளில், ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. போர்ட்டபிள் லாஞ்சரில் இருந்து மிகக் குறுகிய தூர ஏவுகணையின் இரண்டு வெற்றிகரமான சோதனைகள் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிவேக ஆளில்லா வான்வழி இலக்குகளுக்கு எதிராக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இலக்குகள் ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்