சிம்மாசனத்தில் கண் சிமிட்டிய இந்தியா.. அப்படியே தலையசைத்த உலக நாடுகள்.. விடிவெள்ளியாக மாறிய G20..

x

ஜி20 மாநாட்டில் , பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன..

ப்ரீத்: g20 மாநாடு தொடர்பான காட்சிகளை பயன்படுத்திக் கொண்டு, பரபரப்பான பின்னணி இசையை பயன்படுத்திக் கொள்ளவும்

ஜி20 மாநாடு என்பது ஒவ்வொரு இந்தியருக்கும், பெருமை மிகு தருணமாக மாறியுள்ளது ... 20க்கும் மேற்பட்ட நாட்டின் தலைவர்கள் குவிந்திருக்க, இந்தியா தலைமை சிம்மாசனத்தில் அமர்ந்து வழிநடத்திக் கொண்டிருப்பதே, அந்த பெருமைக்கு காரணம்...

இந்த மாநாட்டில் எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தும், வார்த்தையும், உறுப்பினராக இருக்கும் நாடுகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான, வழிகாட்டி என்பதால், உறுப்பினராக இருக்கும் நாடுகள் முழுக்கவனத்தையும் செலுத்தும்..

தொடக்கத்திலேயே பிரதமர் மோடி, ஆப்பிரிக்க யூனியனை, நிரந்தர உறுப்பினராக ஏற்றுக்கொள்ள கோரிக்கை வைத்ததை, மற்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.

அது மட்டுமில்லாமல், இந்த மாநாட்டில், 112 முடிவுகளை ஒருமித்த கருத்துடன் ஏற்றுக் கொண்ட தோடு, தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே, சரக்கு போக்குவரத்துக்காக, எல்லை கடந்த ரயில்சேவை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது..

புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் சர்வதேச இயற்கை எரிபொருள் கூட்டணியை உருவாக்க வேண்டும். பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடும் அளவை பூஜ்ஜியமாக மாற்ற வேண்டும். இயற்கை எரிபொருள் வர்த்தகத்தை அதிகப்படுத்த வேண்டும், போன்ற இலக்கை அடைய திட்டமிட்டிருக்கின்றன.

பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் பெண்களுக்கான முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளிடம் உள்ள பொருளாதார சிக்கல்களை தீர்ப்பதே இலக்கு என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவ்வப்போது தலைதூக்கும் அணு ஆயுத பிரச்னைகளை ஒடுக்க, அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ, மிரட்டல்களையோ ஏற்க முடியாது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.. அதே போல, தீவிரவாதத்தையும் ஏற்க முடியாது என தீர்மானித்துள்ளனர்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது கண்டனம் தெரிவிக்கும் எந்த ஒரு தீர்மானமும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் போர் காரணமாக ஏற்பட்ட உணவு பிரச்னை, பொருளாதார பிரச்னைகளை தீர்ப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காகவும் உறுப்பு நாடுகள் பாராட்டுகளை தெரிவித்து உள்ளன.

மாநாடு நடத்தி தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமே தீர்வை தராது, முழுவிச்சில் நடைமுறைக்கு வரும்போதுதான்,இந்த மாநாட்டின் நோக்கம் நிறைவேறியதாக அர்த்தம் என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்....


Next Story

மேலும் செய்திகள்