கண் சிமிட்டும் நொடியில் மர்ம தீவில் காணாமல் போன ராட்சத கப்பல்.. 4 இந்தியர்களின் கதி என்ன?

x

கண் சிமிட்டும் நொடியில் மர்ம தீவில் காணாமல் போன ராட்சத கப்பல்..4 இந்தியர்களின் கதி என்ன?

எகிப்தின் அலக்ஸ்சாண்ட்ரியா நகரில் உள்ள எல் டெகைலா துறைமுகத்தில் இருந்து, 6 ஆயிரம் டன் உப்பு ஏற்றிக் கொண்டு, ரேப்டர் என்ற கப்பல் துருக்கியின் இஸ்தான்புல் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த‌து. கிரீஸின் லெஸ்போஸ் தீவுப் பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்த போது, திடீரென கோளாறு ஏற்பட்டதாக, கிரீக் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், கப்பல் மாயமானதாக கூறப்படுகிறது. விரைந்து சென்ற கடலோர காவல்படையினர், ஒரு உடலை மீட்டுள்ளனர். கப்பலில், 4 இந்தியர்கள், 8 எகிப்தியர்கள், 2 சிரிய நாட்டவர்கள் என 14 மாலுமிகள் இருந்துள்ளனர். ஒரு எகிப்தியர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்ற 12 பேரையும் தேடி வருகின்றனர். எகிப்து, கிரீக் கடற்படைகள், கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்க்ள மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. விபத்து நடந்த பகுதியில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்