விமானம் வாங்கினால் படம் எடுக்கிறேன்..! ஷாருக்கானுக்கு சவால் விட்ட மணிரத்னம் | Shah Rukh Khan

x

விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷாருக் கான், தன்னை வைத்து எப்போது மீண்டும் படம் இயக்குவீர்கள் என, மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பினார். மீண்டும் தன்னை வைத்து படம் இயக்கினால், தைய தையா பாடலுக்கு விமானத்தின் மீது ஏறி ஆடக்கூட, தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கு மணிரத்னம் விளையாட்டாக, விமானம் வாங்கியதும் தங்களை வைத்து படம் இயக்குகிறேன் என்றார். உடனே ஷாருக் கான், நான் விமானம் வாங்கினால் என்னை வைத்து இயக்குவீர்களா என கேள்வியெழுப்ப, மணிரத்னமும் இயக்குவேன் என பதிலளித்தார். அதற்கு ஷாருக் கான், எனது படங்கள் தற்போது செய்யும் வசூலை பார்க்கும்போது, விமானம் வாங்க நீண்ட நாட்கள் ஆகாது என்றார். இந்த உரையாடலால், நிகழ்ச்சியின் பங்கேற்றவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது


Next Story

மேலும் செய்திகள்