"என்னோட செருப்பை காணலை சார்.." - “போலீசுக்கு போன் செய்த இளைஞர்“ - சிசிடிவியில் சிக்கிய சில்லி பாய்...
கர்நாடக மாநிலம் மங்களூர் பாலாம்பட்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர் ஒருவர் கலந்து கொண்டிருக்கிறார். தனது செருப்பை மண்டபத்தின் வாசலில் விட்டுச் சென்ற அவர், மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது அது மாயமானது கண்டு அதிர்ந்து போனார். உடனே அவசர உதவி எண் 112க்கு போன் செய்து புகார் கூறிய நிலையில், உடனே தன் செருப்பை கண்டுபிடித்து தர வேண்டும் என அடம் பிடித்துள்ளார். புகார் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், மண்டப வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போது இளைஞர் ஒருவர் அந்த செருப்பை போட்டுச் செல்வது பதிவாகி இருந்தது. அதேநேரம் புகார் கொடுத்தவரிடம் செருப்பு வாங்கியதற்கான பில்லை தருமாறு தெரிவித்த போலீசார், கைவரிசை காட்டிச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.
Next Story
