"பிரதமர் மோடி எப்படிப் பயணிக்கிறார்?" சித்தராமையா பதிலடி

x

கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை சந்தித்தார். இதனிடையே, வீடியோ ஒன்றை சுட்டிக்காட்டிய கர்நாடக பாஜகவினர், சித்தராமையா சொகுசு விமானத்தில் பயணம் செய்ததாகவும், மாநிலத்தில் வறட்சி இருக்கும்போது முதல்வரின் செயல்பாடுகள் இப்படி இருப்பதாகவும் விமர்சித்தனர். இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள சித்தராமையா, தன்னை இவ்வளவு குற்றம்சாட்டும் பாஜவினர், அவர்களது கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடி எப்படிப் பயணிக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு பேச வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்