மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து - 2 பயணிகள் உயிரிழப்பு

x

ஆந்திர மாநிலம் பாடேறு மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விழுந்த‌தில், 2 பயணிகள் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்திலுள்ள சோடவரத்தில் இருந்து பாடேறுக்கு, 49 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்த‌து. பாடேறு மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த‌து. பள்ளத்தாக்கில் மரக்கிளைகளில் சிக்கி பேருந்து தொங்கிக்கொண்டிருந்த‌தை பார்த்து சாலையில்சென்று கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினரும், பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்