கண்முன்னே வாழும் கடவுள்..தொழிலாளர்களுக்கு கொடுத்த ஷாக்..வீட்டு வாசலில் நின்ற தீபாவளி பரிசு

x

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் "மிட்ஸ் ஹெல்த்கேர்" எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான பாட்டியா, தீபாவளி பரிசாக தனது 12 'நட்சத்திர ஊழியர்களுக்கு' கார்களை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார். எதிர்காலத்தில் மேலும் 38 ஊழியர்களுக்கு கார்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து பாட்டியா கூறும்போது, இந்த கார்கள் தீபாவளி பரிசுகள் மட்டுமல்ல, நிறுவனத்தின் மீதான அவர்களின் " அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கைக்கு வெகுமதிகள் என தெரிவித்துள்ளார். கார்களைப் பரிசாக பெற்ற சில ஊழியர்களுக்கு அதனை ஓட்ட கூட தெரியாது. எதிர்பாராத இந்த பரிசால் அவர்கள் திகைத்துப் போய் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்