பெண்களை கிண்டலடித்த கும்பல்... மாறி மாறி தாக்கிக் கொண்ட கோஷ்டிகள் - வெளியான காட்சிகள்

x

கேரள மாநிலம் திருவல்லா அருகே பெண்களை கிண்டலடித்ததாக, ஹோட்டலின் முன், இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காட்சிகள், வலை தளங்களில் பரவி வருகிறது.ராமன்சிறை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு கோஷ்டிகள் தனித்தனியே உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கோஷ்டியை சேர்ந்த பெண்களை மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு கோஷ்டியினரும் மோதிக்கொண்டனர். இந்த காட்சி வைரலான நிலையில், போலீசார் இரு கோஷ்டிகளை சேர்ந்தவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்