திருநள்ளாறு கோவில் அருகே விற்கப்பட்ட பூஞ்சை பூத்த உணவுகள் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

x

திருநள்ளாறு கோவில் அருகே விற்கப்பட்ட பூஞ்சை பூத்த உணவுகள் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடித்த பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள யாசகர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம்.

இதற்காக திருநள்ளாறு நலன்குளம் பகுதியில் சிலர் உணவு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த உணவு தரமற்ற இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்பொழுது யாசகர்கள் வணிகர்களிடையே கூட்டணி அமைத்து பல நாட்களுக்கு முன் சமைத்த உணவை சுழற்சி முறையில் விற்பனை செய்வது தெரிய வந்தது.

மேலும் அவர்களிடமிருந்து 500க்கும் மேற்பட்ட உணவு பட்டணங்கள் கைப்பற்றப்பட்டு உணவு பாதுகாப்பு துறை அளித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் தரமற்ற உணவு விற்பனை செய்பவர்களாக புகார் எழுந்தது எடுத்து இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திருநள்ளாறு பகுதியில் சோதனை நடத்தினர்.

இந்த ஆய்வின் போது அங்குள்ள ஒரு பெண் வியாபாரி பூஞ்சை பூத்த உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் யாத்திரிகர்கள் யாசகர்களுக்கு வழங்கும் அன்னதான உணவு மீண்டும் யாசகர்கள் வியாபாரியிடம் வழங்கி விடுவது தெரியவந்தது.

இதனை எடுத்து பூஞ்சை படிந்த பாதுகாப்பற்ற உணவை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர் அதனை அழித்தனர்.

மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் தயாரித்த உணவை விற்பனை செய்த பெண் வியாபாரி மீது பாதுகாப்பற்ற உணவை விற்பனை செய்தது வழக்கு பதிவு செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

வியாபாரிக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இத்தகைய தரமற்ற உணவை விற்பவர்களை கண்டறியப்பட்டால் எதிர்காலத்தில் நலன் குளம் பகுதியில் இருந்து அவர்கள் நிரந்தரமாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று வியாபாரிகளை எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்