வடிவேலு காமெடியை நிஜமாக்கிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

புத்தாண்டைக் கொண்டாட தமிழகம் வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோவிலேயே தமிழகம் முழுவதும் தங்கள் சுற்றுப்பயணத்தைத் துவங்கினர்... கடந்த 28ம் தேதி சென்னை வந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இத்தாலியைச் சேர்ந்த 28 சுற்றுலா பயணிகள் 10 ஆட்டோக்களில் சென்னையில் இருந்து புதுச்சேரி, தஞ்சை, மதுரை, ராஜபாளையம், தூத்துக்குடி, குமரி வழியே திருவனந்தபுரம் வரை ஆட்டோவில் பயணம் செய்யத் திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்... ஆட்டோவிலேயே நேற்றிரவு புதுவையில் இருந்து தஞ்சை வந்த அவர்கள் சுற்றுலா தலங்களை ஆட்டோவில் சுற்றிப்பார்த்து வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com