டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

x

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ள கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. எய்ம்ஸ் இயக்குநர் கட்டிடத்தின் 2-வது மாடியில், மருத்துவ வகுப்புகள் நடைபெறும் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ விபத்தில் மேஜை, நாற்காலிகள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும், அலுவலகம் சார்ந்த கோப்புகளும் சேதமடைந்தன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என டெல்லி தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்