அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை!

x

கேரளாவில், தொல்பொருள் மோசடி வழக்கில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரனிடம் மத்திய அமலாக்கத்துறையினர், 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த மோன்சன், கொச்சியில் போலி புராதன பொருட்கள் விற்பனை நிறுவனத்தை நடத்தியதாக கூறப்பட்ட புகாரில், 2 ஆண்டுகளுக்குமுன் கைதானார். அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக சுதாகரன் மீதும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரிடம் 9 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் வரும் 30-ம் தேதி ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்