மீண்டும் புயலை கிளப்பிய தேர்தல் பத்திரங்கள்.. -அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி..

x

உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு 6 நாட்களுக்கு பிறகு, 8

ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்புடைய தேர்தல்

பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தெரிய

வந்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் திட்டம், அரசியல் சட்டத்திற்கு

முரணானது என்று கூறி, பிப்ரவரி 15ஆம் தேதி, உச்ச

நீதிமன்றம் அதற்கு தடை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 27 முதல், பிப்ரவரி 15

வரை, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஆயிரத்து 350

தேர்தல் பத்திரங்களை மத்திய அரசு அச்சடித்துள்ளதாக

தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் வழக்கில் தங்களுக்கு சாதகமாக

உச்ச நீதிமன்றம் தீர்பளிக்கும் என்ற நம்பிக்கையில்

மத்திய அரசு கடன் பத்திரங்களை தொடர்ந்து அச்சடித்து

வந்ததாக, ஆர்.டி.ஐ செயல்பாட்டாளர் கம்மோடர்

லோகேஷ் பத்ரா கூறியுள்ளார்.

8 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்

பத்திரங்களை, நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி

பிரெஸ் நிறுவனம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி

ஆறு நாட்களுக்கு பிறகு, பிப்ரவரி 21ஆம் தேதி, மத்திய

அரசிடம் ஒப்படைத்ததாக ஆர்.டி.ஐ மூலம் தெரிய

வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்