நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளம்... களமிறங்கியது இந்தியா... பறந்தது விமானப்படை விமானம்

x

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு, 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியது. கடந்த 3-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில், மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா சார்பில் விமானப்படையின் சி-130 சிறப்பு விமானம் மூலம் 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 11 டன் எடையிலான நிவாரணப் பொருட்கள் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. நேபாளம் சென்றடைந்த நிவாரண பொருட்கள் துணைப்பிரதமர் பூர்ணா பகதூரிடம் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்