மலைப்பாம்பை தோளில் போட்டு கொஞ்சிய இளைஞர் 'மதுர' பட காட்சியை போன்று போதையில் அட்டூழியம்

x

மதுர படக் காட்சியை போன்று மலைப்பாம்பை தோளில் போட்டு இளைஞர் கூலாக பேசிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கோணனூர் கிராமத்தில் மலைப்பாம்பு இருந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர். இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த இளவரசன், குடிபோதையில் அந்தப் பாம்பை பிடித்து தனது தோளின் மீது போட்டு பாம்புடன் கொஞ்சிப் பேசி விளையாடினார். ஒரு கட்டத்தில் 10 ரூபாய், 10 ரூபாய் என பாம்பை விற்பது போன்று வேடிக்கை காட்டிய அவர், தனது காதலி வரும் வரை அந்த பாம்பை விட மாட்டேன் என்றார். பின்னர் தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்