கார் முன் மருத்துவரை வைத்து தரதரவென இழுத்து சென்ற ஓட்டுநர் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

x

காரின் பானட்டில் மருத்துவர் ஒருவர் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது... செக்டர் 8, பஞ்ச்குலா போக்குவரத்து சந்திப்பில் ககன் என்ற மருத்துவரின் வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற கார், ககனின் கார் மீது மோதியுள்ளது. இதனால் காரை நிறுத்தி இறங்கி தட்டிக் கேட்ட மருத்துவரை, காரைக் கொண்டு இடித்த அந்த நபர், கார் பானட்டில் வைத்து சுமார் 50 மீட்டர் வரை இழுத்துச் சென்றுள்ளார். மருத்துவர் ககன் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினார்... கார் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்