மாவீரன் பட கட்டடம் போல விரிசல் விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு..குடியிருப்புக்கு பேட்ச் ஒர்க்

x

காரைக்கால் புளியங்கொட்டை சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, அதில் 72 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியது முதல் அதிகாரிகள் கட்டட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் மேற்கூரை இடிந்து விழுந்தும், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டும் காணப்படுகிறது. இதுகுறித்து புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பயனாளிகள் குற்றம்சாட்டினர். மேலும் குழந்தைகளுடன் அச்சத்தில் வசித்து வருவதாக கூறிய பெண்கள், அசம்பாவிதம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்