மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா? மிரட்டும் உருமாறிய JN1வேரியண்ட்

x

உலகளவில் கொரோனா தொற்று பரவல் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவில் 7 மாதத்தில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 752 பேருக்கு தொற்று பரவியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

கொரோனா பெருந்தொற்றில் இருந்து தப்பி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், தற்போது தொற்று பாதிப்புகள் அதிகரித்து மீண்டும் மக்களை பீதியடைய செய்துள்ளது..

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின் படி, கடந்த ஒரு மாதத்தில் 52 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும், 8 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஒரே நாளில், 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 7 மாதத்தில் பதிவானதிலேயே சனிக்கிழமையன்று தான் அதிகளவிலான கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

மொத்தமாக 23ம் தேதியன்று, இந்தியாவில் 3 ஆயிரத்து 420 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஒருவார காலமாக அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது.. இந்நிலையில் தற்போது கேரளா மட்டுமன்றி.. தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப், டெல்லியிலும் தொற்று பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமையன்று 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 100ஐ கடந்தது..

இதனால் கொரோனா தொற்று வேகமாக பரவும், மாநில முதலமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

தற்போது ஜே என் 1 உருமாறிய கொரோனா தொற்று பரவி பொதுமக்களை கவலையுறச் செய்து வருகிறது. ஆனால் இதுகுறித்து கவலைகொள்ள வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஜே என் 1 தொற்று பாதித்தவர்களில் 93 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும் பெரியளவில் இத்தொற்று பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குளிர் காலம் என்பதால் ஆர்.எஸ்.வி. உட்பட நுரையீரல் சம்பந்தமான காய்ச்சல் அதிகரித்துள்ளதால்..மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அந்தந்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்