"காலேஜ மூடுங்க.." - ஆர்டர் போட்ட காங். மாணவர்கள் - காண்டாகிய கல்லூரி முதல்வர் - வைரல் வீடியோ

x

கேரள மாநிலம் வயநாடு அருகே காங்கிரஸ் மாணவர் அமைப்பினருக்கும், கல்லூரி முதல்வருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு, மாநிலம் தழுவிய வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தநிலையில், நடவயல் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் புகுந்த காங்கிரஸ் மாணவர் அமைப்பினர், கல்லூரியை மூடுமாறு ரகளையில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி முதல்வருக்கும், மாணவர் அமைப்பினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்