சந்திரயான் - 3 நிலவில் தரையிறங்குமா?.. "சாதகமான சூழ்நிலை இல்லை என்றால்.." - முக்கிய கட்டத்தில் பேரதிர்ச்சி தகவல்

x

சாதகமான சூழ்நிலை ஏற்படவில்லை என்றால் சந்திராயன் மூன்றின் விக்ரம் லாண்டர் தரையிறங்கும் நேரத்தை மாற்றியமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்ப‌ப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவு சுற்றுவட்டப்பதையில் பயணித்து வருகிறது. தரையிறங்குவதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள விக்ரம் லேண்டர், 23ஆம் தேதி மாலை 6 மணி 4 நிமிடங்களுக்கு தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், தரையிறங்குவதற்கான காரணிகள் சாதகமாக இல்லை என்று தோன்றினால், ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்க வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ ஸ்பேஸ் அப்ளிகேஷன் மையத்தின் இயக்குநர் நீலேஷ் எம் தேசாய் தெரிவித்துள்ளார். திட்டத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் 23ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தொடர்பு துண்டிக்கப்பட்டு, நிலவில் மோதி தொல்வியடைந்துள்ளதால், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் உந்துசக்தி கருவியின் பயணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்