நிலவில் யாரும் எதிர்பார்க்காத மொமெண்ட்... சந்திரயான் 3 -க்கு காத்திருந்த ட்விஸ்ட் - ஆச்சரியத்தில் உறைந்து போன இஸ்ரோ

x

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி, சந்திரயான் -3 விண்கலம், பூமியிலிருந்து ஏவப்பட்டது. இது பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கிறது. இதனையடுத்து கடந்த 17ம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இந்த நிலையில், சந்திராயன் 2 திட்டத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர், தற்போது நிலவை சுற்றி வரும் நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் தொலைத்தொடர்பு ஆர்பிட்டருடன் இணைக்கப்பட்டதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தற்போது இருவழி தொலைதொடர்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், சந்திரயான்-3 விண்கலத்தை வரவேற்கும் வகையில், ஆர்பிட்டர், வரவேற்கிறேன் நண்பா என, சமிக்கையை அனுப்பி இருப்பதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்