காவிரி விவகாரம்... ஸ்தம்பிக்கும் கர்நாடகா.. - தமிழக எல்லையில் குவிந்த போலீஸ் | Kaveri River
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்புகள் மாநிலம் தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஏற்கனவே கடந்த 26-ம் தேதி பெங்களூருவில் பந்த் நடைபெற்ற நிலையில், மீண்டும் இன்று முழு அடைப்பு நடைபெறவுள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கையாக தமிழக எல்லை பகுதி வரை அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகள் கர்நாடகாவிற்குள் இயக்கப்படாது எனவும், பெங்களூரு செல்லக்கூடிய பேருந்துகள், ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது
Next Story
