பாஜகவை மிரட்டும் கூட்டணி கட்சி.. 4% வாக்குல தான் உங்க உயிர்நாடி.. எங்கள பகைச்சா 18 தொகுதியும் ஊத்திக்கும்.. எச்சரிக்கை

x

மதச்சார்பற்ற ஜனதா தளத்தை புறக்கணித்தால், அதனால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு பொறுப்பாக மாட்டோம் என்று பாஜகவுக்கு குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜகவும் மத‌ச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணியில் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த‌து. இந்நிலையில், பெங்களூருவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தேர்தலில் முக்கியத்துவம் அளிக்காவிட்டால், அதற்கான பலனை பாஜக அனுபவிக்க நேரிடும் என்றார். 18 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் உள்ள 4 விழுக்காடு வாக்குகள் கிடைத்தால்தான், பாஜகவால் வெற்றி பெற முடியும் என்றும் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்