பாஜக களமிறக்க போகும் பிரபல நடிகையின் அஸ்திரம்.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்

x

நடிகையாக இருந்தாலும் வட மாநில அரசியல் தளத்தில் அடிக்கடி ஒலிக்கும் பெயர் கங்கனா ரனாவத்.... 4 முறை தேசிய விருது வென்றவரான கங்கனா ரனாவத், அரசியல் ரீதியாகவும் பல்வேறு கருத்துகளை கூறி இருக்கிறார். பாஜகவின் ஆதரவாளராக அறியப்படும் கங்கனா ரனாவத்திற்கு மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளித்தது. சமீபத்தில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிலும் கங்கனா கலந்துகொண்டார். இந்நிலையில், அரசியலில் இணைவதற்கு இதுதான் உகந்த நேரம் என கங்கனா ரனாவத் பேட்டி அளித்துள்ளார். தான் ஒரு தேசியவாதி எனக் கூறியுள்ள கங்கனா, நாடு தனக்கு தந்ததை, தானும் திருப்பித் தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்