பாரத ரத்னா விருது வழங்கும் விழா..!பங்கேற்ற முக்கிய தலைவர்கள்..! அத்வானிக்கு மட்டும் அங்கே இல்லை..

x

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட விருதாளர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், பீகார் முன்னாள் முதல்வர் கற்பூரி தாகூர், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 5 பேருக்கு மத்திய அரசு கடந்த மாதம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அறிவித்தது. இந்நிலையில் விருதாளர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே பி நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பி.வி நரசிம்மராவ் சார்பாக அவரது மூத்த மகன் பிரபாகர் ராவும், சவுத்ரி சரண்சிங் சார்பாக அவரது பேரனும் RLD கட்சியின் தலைவருமான ஜெயந்த் சவுத்ரியும், கற்பூரி தாகூர் சார்பாக அவரது மகனும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான ராம்நாத் தாகூரும், எம்.எஸ் சுவாமிநாதன் சார்பாக அவரது மகள் நித்யா ராவும் விருதைப் பெற்றுக் கொண்டனர். பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட பாஜக மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானிக்கு இன்றைய தினம் விருது வழங்கப்படவில்லை... மாறாக நாளைய தினம் அவருடைய வீட்டிற்கு குடியரசுத் தலைவரே நேரில் சென்று விருதை வழங்குகிறார்.


Next Story

மேலும் செய்திகள்