பிரபல நடிகை கணவர் மீது தாக்குதல்? - பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்

x

பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை ஹர்ஷிகா பூனச்சா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தன் கணவர் புவன் பொன்னண்ணாவுடன் பிரேசர் டவுன் பகுதியில் உள்ள உணவு விடுதிக்கு சென்றபோது நடந்த தாக்குதல் சம்பவத்தை ஹர்ஷிகா பூனச்சா தன் சமூக வலை தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இரவு உணவு சாப்பிட்டுவிட்டு காரில் ஏறும்போது 4 பேர் கும்பலாக வந்து, "இவ்வளவு பெரிய‌ வாகனம் கொண்டு வந்தால் எங்கள் மீது மோதிவிடும்" என உருதில் சத்தம் போட்டதாகவும், அதற்கு தன் கணவர் "இன்னும் வாகனத்தையே எடுக்காத போது அதற்குள் ஏன் சத்தம் போடுகிறீர்கள்?" என கன்னடத்தில் கேட்டதாகவும் தெரிவித்துள்ள ஹர்ஷிகா பூனச்சா, அதற்கு அவர்கள் தாக்கியதுடன், தன் கணவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையில் புகாரளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்