கைதான சந்திரபாபு நாயுடு-போராட்டத்தில் குதித்த தொண்டர்கள்-களமிறங்கிய ராணுவம்மொத்தமாக முடங்கிய ஆந்திரா

x

ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியின்போது திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம், நிபந்தனைகளை மீறி தனியார் நிறுவனங்களுக்கு 371 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ததாக, சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதியப்பட்டது. வழக்கில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்த சிஐடி போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்திய பின்னர், அவரை விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையின் முடிவில், சந்திரபாபு நாயுடு அரசு பணத்தை தவறான வழியில் திருப்பி விட்டிருப்பதை, அரசு தரப்பு ஆதாரத்துடன் தெரிவித்திருப்பதாக கூறிய நீதிமன்றம், அவருக்கு 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தது. இதனிடையே தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் குவிந்ததால், விஜயவாடாவில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. இதனால் அங்கு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் நீதிமன்றத்தை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்தை, போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்