நினைக்காத நேரத்தில் வந்த மரணம்... பல உயிர்களை காவு வாங்கிய `டயர்' - சிதறிய உடல்கள்.. தெறித்த ரத்தம்

x

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிரதிப்பாடு மண்டலத்தில் உள்ள பாதாலம்மா கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று பஞ்சர் ஆகியுள்ளது... அதனால் சாலையோரம் நிறுத்தி 4 தொழிலாளர்கள் டயரை மாற்றிக் கொண்டிருந்தனர்... அப்போது அதிவேகமாக வந்த ஆந்திர அரசுப் பேருந்து தொழிலாளர்கள் மீது மோதியது... இதில் டயர் மாற்றிக் கொண்டிருந்த தாசரி பிரசாத், தாசரி கிஷோர், கிளீனர் நாகய்யா மற்றும் ராஜூ ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பாபட்லா மாவட்டத்தில் உள்ள நக்கா பொக்கலபாலம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது... தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்