அண்ணன் மகனுடன் யுத்தம்.. கட்சியை காப்பாற்ற எதற்கும் துணிந்த சரத் பவார்..!
மகாராஷ்டிராவில் 53 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 41 எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவாருக்கும், 12 பேர் சரத் பவாருக்கும் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவாருக்கே சொந்தம் என தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. சரத் பவார் தரப்புக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்சந்திர பவார் என்ற பெயரை தேர்தல் ஆணையம் வழங்கியது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சரத் பவார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அஜித் பவார் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story