கையில் பிளேடால் கீறி துணிவு படத்தின் அப்டேட் கேட்ட அஜித் ரசிகர் -இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

x

கையில் பிளேடால் கீறி துணிவு படத்தின் அப்டேட் கேட்ட அஜித் ரசிகர் - இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

புதுச்சேரியில் அஜித் ரசிகர் ஒருவர் கையில் பிளேடால் கீறி துணிவு படத்தின் அப்டேட் கேட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் அப்டேட்டை அவரது ரசிகர்கள் சமூக வலைதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியை சார்ந்த அஜித் ரசிகர் ஒருவர் துணிவு AK 61 படத்தின் அப்டேட்டை கேட்டு தனது கையில் பிளேடால் எழுதி அதனை செல்போனில் வீடியோ எடுத்து புதுச்சேரி அஜித் ரசிகர்கள் மட்டும் உள்ள பிரஞ்ச் சிட்டி அஜித் ஃபேன்ஸ் என்ற whatsapp குழுவில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்